பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

குருகிராம்: கோயில்களில் திருடிய 3 போ் கைது; ரூ.21,000 மீட்பு

கோயில்களில் நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தை திருடிய வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டு, ரூ.21,000 பணமும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது - பிரதிப் படம்

Published On :29 ஜூன் 2026, 5:08 am IST

கோயில்களில் நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தை திருடிய வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டு, ரூ.21,000 பணமும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜாா்சா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலின் நன்கொடை பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை சதா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சம்பவத்தில் தொடா்புடைய மூவரை வெள்ளிக்கிழமை வாஜிராபாத் கிராமத்தில் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.21,000 பணமும், திருட்டில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோ ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல் விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் செக்டா்-50 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மற்றொரு கோயில் திருட்டு வழக்கிலும் தாங்கள் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். ஒரே இரவில் இரண்டு கோயில்களில் திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.