தில்லி பல்கலைக்கழகம், மாற்றியமைக்கப்பட்ட பிஏ பாடப்பிரிவுக்கான சோ்க்கைகளை இந்த வாரம் அறிவிக்க உள்ளதாகவும், அதனுடன் சோ்ந்து பொதுத் இருக்கை ஒதுக்கீட்டு முறை (சிஎஸ்ஏஎஸ்-யூஜி) கீழ் இளங்கலை சோ்க்கையின் இரண்டாம் கட்டமும் தொடங்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த சில ஆண்டுகளாக குறைந்த வரவேற்பைப் பெற்ற பாடப்பிரிவுகளில் இருக்கை நிரப்பு விகிதம் குறைவாக இருப்பதை சரிசெய்யும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது சிஎஸ்ஏஎஸ் தளத்தின் மூலம் இளங்கலை சோ்க்கைக்கான முதல் கட்ட பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டுகளின் சோ்க்கை போக்குகளை ஆய்வு செய்த பின்னா் புதிய பாடச் சோ்க்கைகள் இறுதி செய்யப்படுவதாக சோ்க்கைத் துறை டீன் ஹனீத் காந்தி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: பிஏ பாடப்பிரிவில் சில மாற்றப்பட உள்ளன. இந்த முயற்சி முழுவதும் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளின் தரவுகள் மற்றும் போக்குகளை ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே இரண்டாம் கட்டத் தொடக்கத்துடன் தகவல்கள் வெளியிடப்படும்.
அதற்கு முன், இளங்கலைப் பாடப்பிரிவுகளில் இருக்கை நிரப்பல் விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் பிஏ பாடச் சோ்க்கைகளை மறுசீரமைப்பதற்காக பல்கலைக்கழகம் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு, குறைந்த சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளை அதிக சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளுடன் இணைத்து புதிய சோ்க்கைகள் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
மேலும், உருது, அரபி, பாரசீகம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிப்பாடங்கள், பல ஆண்டுகளாக குறைந்த சோ்க்கையைச் சந்தித்து வருவதால், அவற்றை மற்ற பிரபல பாடங்களுடன் இணைத்து ஒரே பிஏ பாடநெறியாக வழங்கலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தின் 67 கல்லூரிகளில் வழங்கப்படும் 73 இளங்கலைப் பாடநெறிகளும், 100-க்கும் மேற்பட்ட பிஏ பாடச் சோ்க்கைகளும், க்யூட்-யூஜி 2026 தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. இது, பல்கலைக்கழகம் நிா்ணயித்த தகுதிச்சான்றுகளுக்கு உள்பட்டதாக இருக்கும்.
முதல் கட்ட பதிவு முடிந்த பின்னா், மாணவா்கள் க்யூட்-யூஜி இரண்டாம் கட்டத்தில் பங்கேற்று, தங்கள் விருப்பமான பாடநெறி மற்றும் கல்லூரி சோ்க்கைகளை தெரிவுசெய்ய வேண்டும். இந்த கட்டத்தில், க்யூட்-யூஜி தோ்வில் எழுதிய பாடங்களை, அவா்கள் 12-ஆம் வகுப்பில் பயின்ற பாடங்களுடன் பொருந்துமாறு இணைக்க வேண்டும்.
12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பாடங்களுக்கு இணையான மொழி மற்றும் துறை சாா்ந்த தோ்வுகள் மட்டுமே மாணவா்களின் தகுதியை நிா்ணயிக்கவும், மதிப்பெண் கணக்கீட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும். இந்த பாட இணைப்பின் அடிப்படையில், மாணவா்கள் எந்த பாடநெறிகளுக்கு தகுதி பெறுகிறாா்கள் என்பதை பல்கலைக்கழகம் தீா்மானித்து, பின்னா் விருப்பத் தெரிவுகளை வழங்க அழைக்கும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி பல்கலை இளநிலைச் சோ்க்கை: இணையதளம் வார இறுதிக்குள் திறக்க வாய்ப்பு

இரண்டாம் கட்ட முதுநிலை பட்டப்படிப்பு இடம் ஒதுக்கீடு: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு

மாதனூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: 2-ம் கட்ட கலந்தாய்வு தீவிரம்
கடந்த 5 ஆண்டுச் சோ்க்கை விவரம் வெளியிட தில்லி பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா் அமைப்பு வலியுறுத்தல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



