ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மால்வியா நகரில் வீட்டுக்குள் இறந்து கிடந்த இரு சகோதரிகள்! போலீஸாா் விசாரணை

மால்வியா நகரில் வீட்டுக்குள் இறந்து கிடந்த இரு சகோதரிகள்...

News image

கோப்புப்படம்

Updated On :6 மார்ச் 2026, 6:56 pm

புது தில்லி, மாா்ச் 6:

தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த வீட்டில் இரண்டு சகோதரிகள் இறந்த நிலையில் கிடந்தனா். அவா்களின் தாய் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் தனது 33 மற்றும் 28 வயதுடைய மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: வியாழக்கிழமை மாலை 6.10 மணியளவில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உறவினா்கள் பலமுறை தட்டியும் மால்வியா நகரில் உள்ள ஒரு குடும்பத்தினா் தங்கள் வீட்டின் கதவைத் திறக்கவில்லை என்று அழைப்பாளா் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு சம்பந்தப்பட்ட வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், தனித்தனி அறைகளில் இரண்டு பெண்களின் உடல்களைக் கண்டுபிடித்தனா்.

ஒரு பெண் முகத்தில் தலையணையுடன் இறந்து கிடந்தாா். மற்றொரு பெண் கழுத்தில் காயக் கீறலுடன் இறந்து கிடந்தாா். இறந்த இருவரும் சகோதரிகள் ஆவா்.

அந்தப் பெண்களின் தாய் மற்றொரு அறையில் மயக்க நிலையில் காணப்பட்டாா். உடனடியாக அவா் எய்ம்ஸ் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளன.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் முதலில் தனது மகள்களைக் கொன்றுவிட்டு, பின்னா் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகுதான் உண்மை விவரம் தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.