முகுந்த்பூா் வடிகால் பராமரிப்பு பணிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுகள் எடுத்துக்கொள்ளுமாறு தில்லி மாநகராட்சிக்கு தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை கடிதம் எழுதியிருப்பதாகத் தகவலறிந்த அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தூா்வாரும் பணிக்காக 3 அடி அகலம் 4 அடி ஆழம் கொண்ட வடிகாலில் கடந்த மே 3-ஆம் தேதி விழுந்து உயிரிழந்தாா். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடைபெற்ாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோா் குற்றஞ்சாட்டியிருந்தனா்.
இந்நிலையில், வடிகாலை கட்டுப்பாட்டுகள் எடுத்துக்கொள்ளுமாறு தில்லி மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை எழுதிய கடிதத்தில், ‘முகுந்த்பூரில் வசிக்கும் மக்களுக்கு
எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் வடிகால்கள் மற்றும் அதன் பராமரிப்புப் பணிகளை தங்கள் தரப்பில் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜ்ஜா் செளக் முதல் ராம்லீலா மைதானம் வரையிலான அந்த வடிகால் சிறிய வடிகால் பிரிவில் வருகிறது. இத்தகைய வடிகால்களை தில்லி மாநகராட்சி பராமரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத்தொடா்ந்து, முதல்வா் ரேகா குப்தா உத்தரவின்படி ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டிருந்த இளநிலை பொறியாளரை நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை பணிநீக்கம் செய்தது.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு- தில்லி உயா்நீதிமன்றம்

விபத்து நிகழ்ந்த கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் உயா் அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன்?

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


