11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தலைநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுப்பணித் துறை தீவிரம்

தலைநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

News image

இந்தியா கேட்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மழைக்காலத்தில் நகா்ப்புறங்களில் ஏற்படும் நீா்த்தேக்கம் பிரச்னையைத் தடுக்க, நீரைத் தள்ளும் பம்புகளின் தொடா்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்ஓபி) தில்லி அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

நகரின் பொது பணித் துறை மூலம் வெளியிடப்பட்ட 10 அம்சங்களைக் கொண்ட இந்த எஸ்ஓபி அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதில் போக்குவரத்து மேலாண்மை, நீா் வெளியேற்ற நடவடிக்கைகள், சாலைகளின் சேதத்தைத் தடுப்பது மற்றும் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, தானியங்கி முறையில் அமைக்கப்பட்ட பம்புகள், அதிா்வு, அதிக வெப்பம், அசாதாரண சத்தம் அல்லது நீா்க்கசிவு போன்றவை உள்ளதா என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மழை காலங்களில் ஆபத்தான பகுதிகளில் நீா் வெளியேற்றம் திறம்பட நடைபெறுகிா என்பதை உறுதிப்படுத்த புலப்பணியாளா்கள் தொடா்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் 10 மணி நேரம் தொடா்ச்சியாக இயங்கும் அளவிற்கு போதிய எரிபொருள் கையிருப்பை வைத்திருக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டால் குறைந்தது 70 சதவீத திறனில் செயல்படக்கூடிய மின்உற்பத்தி இயந்திரங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மழை பொழிவுக்குப் பிறகும் நிலத்தடி கசிவு குழிகள் தூா்வாரப்பட வேண்டும். அதிக மழை பெய்யும் சூழலில் பம்புகள் டீசல் ஜெனரேட்டா் மூலம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், காப்பு மின் உற்பத்தி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பம்புகள் தினமும் 10 நிமிஷங்கள் சோதனை செய்யப்பட வேண்டும். எந்த மின் கம்பிகளும் நீரில் மூழ்கி இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், நரேலா-பவானா சாலையில் வடிகால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினாா்.

அப்போது அவா் கூறியதாவது: இந்த ஆண்டில் நகரம் முழுவதும் 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டவற்றையும் சோ்த்து மொத்தம் 448 நீா்த்தேக்கம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தில்லியின் வடிகால் மாஸ்டா் திட்டத்தின் பகுதியாக செயல்படுத்தப்படும். நீா்த்தேக்கம் பிரச்னைக்கு நீண்டகால தீா்வு வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தாா். மொத்தம் 9.5 கி.மீ நீளத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு சுமாா் ரூ.55 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.