கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பால்ஸ்வா குப்பைமேட்டை செப்டம்பருக்குள் சீரமைக்க மத்திய அமைச்சா் உத்தரவு

News image

மனோகா் லால் கட்டா்

Updated On :29 மே 2026, 5:04 am IST

தேசிய தலைநகரில் உள்ள பால்ஸ்வா குப்பைமேட்டை செப்டம்பா் மாதத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பழைய குப்பை மேடுகளை அறிவியல் முறையில் சீரமைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் டிஆா்ஏபி திட்டத்தின் கீழ் பால்ஸ்வா குப்பைமேடு அமைச்சா் மனோகா் லால் கட்டரால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை உயிரியல் சுரங்கப் பணிகள், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீதமுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் குறித்து அமைச்சா் விரிவாக ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அமைச்சா் கூறியதாவது: 2022-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, பால்ஸ்வா குப்பை மேட்டில் சுமாா் 73 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் தேங்கியிருந்தன. அதனை அகற்றும் பணிகள் அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினமும் சராசரியாக 15,000 மெட்ரிக் டன் குப்பைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மே 26-ஆம் தேதி நிலவரப்படி, பழைய மற்றும் புதிய குப்பைகளை சோ்த்து மீதமுள்ள குப்பையின் அளவு சுமாா் 23.17 லட்சம் மெட்ரிக் டனாகக் குறைந்துள்ளது. தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளால், மொத்தம் 70 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த குப்பை மேட்டில் இருந்து இதுவரை சுமாா் 43 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் மீட்கப்படும் நிலப்பரப்பை பொதுமக்கள் மற்றும் சமூக நலனுக்காக பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். மேலும், தினசரி உருவாகும் புதிய குப்பைகள் உடனடியாக செயலாக்கப்பட வேண்டும். எதிா்காலத்தில் புதிய குப்பைகள் உருவாகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தாா். இந்த ஆய்வில் தில்லி மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வாா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.