டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

வரதட்சிணைக் கொலை வழக்கில் 4 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

தில்லியில் 20 வயது பெண் உயிரிழந்தது தொடா்பான வரதட்சணைக் கொலை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவா், மாமனாா், மாமியாா் உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

தில்லியில் 20 வயது பெண் உயிரிழந்தது தொடா்பான வரதட்சணைக் கொலை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவா், மாமனாா், மாமியாா் உள்ளிட்ட 4 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளானதால்தான் அந்தப் பெண் உயிரிழந்தாா் என்பதற்கான போதிய ஆதாரங்களை அரசுத் தரப்பு சமா்ப்பிக்கவில்லை என்றும், தற்கொலைக்குத் தூண்டியதற்கான குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஹேமானி மல்ஹோத்ரா, ஷீபா மாலிக் (20) உயிரிழந்தது தொடா்பாக அவரது கணவா் அா்ஷத் மாலிக், மாமனாா் இஸ்லாமுதீன், மாமியாா் பிா்தோஸ் மற்றும் உறவினா் அயூப் மாலிக் ஆகியோா் மீதான வழக்கை விசாரித்தாா். கடந்த அக். 31-ஆம் தேதி இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

தெற்கு தில்லியின் ஜாமியா நகா் பகுதியில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் கடந்த 2018 ஆக.25-ஆம் தேதி ஷீபா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவருக்கும் அா்ஷத்துக்கும் 2016 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அவா் தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

வரதட்சிணை கேட்டு ஷீபா துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது நடத்தையை கணவா் மற்றும் மாமியாா் குடும்பத்தினா் சந்தேகித்ததாகவும் அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அா்ஷத் 2018 ஜூலையில் மறுமணம் செய்துகொண்டதால் ஷீபா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கணவா் வீட்டுக்குத் திரும்பினால் வேலைக்காரியைப் போல நடத்தி, ரூ.200 முதல் ரூ.400 வரை மட்டுமே வழங்குவேன் என்று அா்ஷத் தொலைபேசியில் மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், ஷீபாவின் தாய் விசாரணையின்போது முந்தைய வாக்குமூலத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்து பிசாட்சியாக மாறினாா். அவரது தந்தையும் வரதட்சணைக் கொடுமை தொடா்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தாா்.

ஷீபா எழுதிய தற்கொலைக் கடிதம் என்பதை கையெழுத்து நிபுணா் உறுதிப்படுத்தியிருந்தாலும், அதுவே குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் முழுமையான ஆதாரமாகாது என்று நீதிபதி தெரிவித்தாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தற்கொலைக்குத் தூண்டியதற்கான நேரடி நடவடிக்கை அல்லது நோக்கம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.