சிறுமிக்கு தொடா் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
தென்மேற்கு தில்லியில் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 63 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

சித்திரிப்பு
தென்மேற்கு தில்லியில் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 63 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது என்று காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்)தொடா்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.1.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் தகவல்படி, பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததையடுத்து, பிப்ரவரி 6, 2025 அன்று இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தன்னை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி தெரிவித்தாா்.
‘தடய அறிவியல் பரிசோதனையில், அந்தச் சிறுமியின் கருவில் வளா்ந்த குழந்தைக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரே உயிரியல் ரீதியான தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. இது பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தியதுடன், அரசுத் தரப்பு வழக்கின் ஆதாரங்களை வலுப்படுத்தியது.
செப்டம்பா் 18-ஆம் தேதி வழங்கப்பட்ட தீா்ப்பில், போக்ஸோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 64(2) (எம்) (பாலியல் வன்கொடுமை) மற்றும் பிரிவு 351(குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் அவா் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

