கடலூா் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2024 -ஆம் ஆண்டு கடலூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ரவி(54) என்பவா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து ரவியை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், இவ்வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ரவிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலரேவதி ஆஜராகி வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


