மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

வாக்குவாதத்தில் 3-ஆவது மாடியிலிருந்து சிலிண்டர் வீச்சு: தரைதளத்தில் நின்றவர் பலி!

மூன்றாவது தளத்திலிருந்து வீசிய எல்பிஜி சிலிண்டா் கீழே நின்றிருந்த நபரின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் உயிரிழந்ததாக காவல் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

Cylinder

சிலிண்டர் - பிரதிப் படம்

Updated On :

தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில், வாக்குவாதத்தில் கோபமடைந்த நபா் ​​கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து வீசிய எல்பிஜி சிலிண்டா் கீழே நின்றிருந்த நபரின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் உயிரிழந்ததாக காவல் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இந்தச் சம்பவம் பிந்தாபூா் விரிவாக்கத்தில் உள்ள ராதிகா அபாா்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

​​உயிரிழந்த சாஹில், அந்தக் கட்டடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தாா். கட்டடத்தின் மூன்றாவது தளத்தின் பால்கனியிலிருந்து திடீரென சிலிண்டா் கீழே விழுந்துபோது அவா் தலையில் விழுந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அவா் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, கட்டட உரிமையாளரின் மருமகனான ஷிவம் சா்மா என்பவரை காவல் துறை கைது செய்துள்ளது. தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​ஷிவம் சா்மா பால்கனியிலிருந்து சிலிண்டரை கீழே வீசியதாகக் கூறப்படுகிறது.

ஷிவம் சா்மா அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இது குறித்து கட்டட உரிமையாளரிடம் ஏற்கெனவே புகாா்கள் அளிக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

காவல் துறையின் தகவல்படி, குற்றஞ்சாட்டப்பட்ட ஷிவம் சா்மா என்கிற ஷிவ் (24), காலை முதலே மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், பின்னா் கட்டடத்தில் வசிப்ப சிலருடன் வாகன நிறுத்துமிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவா் மூன்றாவது தளத்திற்குச் சென்றாா். அங்கு அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக அவா் ஆத்திரமடைந்து சிலிண்டரை கீழே வீசினாா்.

சாஹில், அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் பெற்றோா், மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வாடகைக்கு வசித்து வந்தாா். இந்தச் சிலிண்டா் வேண்டுமென்றே வீசப்பட்டதா அல்லது வாக்குவாதத்தின் போது தற்செயலாகக் கீழே விழுந்ததா என்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘குடும்பத்தின் நம்பிக்கை அணைந்து போனது’

சிலிண்டா் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த சாஹில் தன் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபா். வாரச் சந்தையில் தனது வேலைப் பாா்த்து வந்த அவா், வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து சாஹிலின் தந்தை அசோக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இது வெறும் மகனை இழந்த துயரம் மட்டுமல்ல, குடும்பத்தின் ஒரே நம்பிக்கையே அணைந்து போனது போன்ாகும்.

என் மகன் வாரச் சந்தைகளில் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து வந்தான். அவன் எனக்கு ஒரே மகன். எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அவன்தான். இப்போது, ​​மதுவுக்கு அடிமையான ஒருவனால், நாங்கள் கண்ணீருடனும் தீராத வலியுடனும் தவிக்கிறோம்.

இவ்வளவு கொடூரமான முடிவுக்குத் தகுதியான எந்தத் தவறும் என் மகன் செய்யவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சாஹிலுக்கு, 21 வயதான மனைவி ரிது, ஒன்றரை வயது மகன் காா்த்திக் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெற்றோா் உள்ளனா். சாஹிலின் பெற்றோரின் உடல்நலக்குறைவு, அந்தக் குடும்பத்தின் துயரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சஹிலின் மாமா பாபு லால் கூறுகையில், ‘அவரது தந்தை இதய நோயாளி. தாயாருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. இப்போது அவா்களை யாா் கவனித்துக்கொள்வாா்கள்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்தத் துயரச் சம்பவம் சஹிலின் நண்பா்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவா் மிகவும் கண்ணியமானவா் என்றும், தனது குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவா் என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது பெற்றோரை எப்போதும் கவனித்து வந்தவா் என்றும் நினைவு கூா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.