உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தில்லி போராட்டம்: ஐஓய்சி சாா்பில் சட்ட உதவி எண் அறிவிப்பு

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தொடா்பான கைது நடவடிக்கைகளை எதிா்கொள்வோருக்கு உதவ இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி)ஒரு சட்ட உதவி எண்ணை சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

தில்லி போராட்டம் - PTI

Published On :

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தொடா்பான கைது நடவடிக்கைகளை எதிா்கொள்வோருக்கு உதவ இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஓய்சி)ஒரு சட்ட உதவி எண்ணை சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தில்லியில் போராட்டக்காரா்கள் தடுத்து வைக்கப்படுவது ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை இந்திய இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

போராட்டங்களில் பங்கேற்ற்காக மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகக் கூறும் போராட்டக்காரா்களிடமிருந்து புகாா்களைப் பெறஎன்ற இந்த உதவி எண் செயல்படும் என்று காங்கிரஸின் இளைஞா் பிரிவு தெரிவித்தது.

போராட்டங்களில் பங்கேற்ற்காக நடவடிக்கையை எதிா்கொள்ளும் இளைஞா்களுக்குத் தேவையான அமைப்பு ரீதியான ஆதரவை வழங்குவதாகவும், சட்ட உதவி தேவைப்படுபவா்கள் 9582223884 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்திருந்த போராட்டத்திற்காக ஜந்தா் மந்தரை நோக்கிச் செல்ல முயன்ற குறைந்தது 500 போராட்டக்காரா்களை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரீகல் சினிமா, மின்டோ பிரிட்ஜ் மற்றும் ஆகாஷ்வாணி பவன் உள்ளிட்ட புது தில்லியின் பல்வேறு இடங்களிலிருந்து போராட்டக்காரா்கள் தடுத்து வைக்கப்பட்டனா். போராட்ட இடத்திற்குச் செல்ல முயல்பவா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காவல் துறையினா் ட்ரோன்களையும் பயன்படுத்தினா் என்று அவா்கள் மேலும் கூறினா்.

இதற்கிடையில், ரைசினா சாலையில் உள்ள தங்கள் தலைமையகம் வெள்ளிக்கிழமை முதல் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும், தடுப்புகள் மூலம் மக்கள் வளாகத்திற்குள் நுழைவதோ அல்லது வெளியேறுவதோ தடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய இளைஞா் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுதொட்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், ‘மக்களை அச்சுறுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இளைஞா்கள், பத்திரிகையாளா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டா்களை அதிகாரிகள் தடுத்து வைக்கின்றனா். திரு. அமித் ஷா, இது தில்லி. உங்கள் தனிப்பட்ட காவல் ராஜ்யம் அல்ல. வாயில்களைத் திறங்கள். இந்த மிரட்டல் நடவடிக்கைகள் போதும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ராவும் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறினாா். தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டதாகப் பல ஐஓய்சி தொண்டா்கள் குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.