ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் தில்லி காவல் துறைக்கு கேமராக்கள்: மத்திய அரசு பரிசீலிக்க அறிவுறுத்தல்

தில்லியில் போராட்டங்கள், கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் துறையினருக்கு, உடலில் பொருத்தப்படும் கேமராக்களை வழங்கக் கோரும் மனுவை பரிசீலிக்குமாறு, மத்திய அரசிடம் தில்லி நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Published On :

தில்லியில் போராட்டங்கள், கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் துறையினருக்கு, உடலில் பொருத்தப்படும் கேமராக்களை வழங்கக் கோரும் மனுவை பரிசீலிக்குமாறு, மத்திய அரசிடம் தில்லி நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் சஹத் ராகவ் என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

தில்லியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், போராட்டங்களைக் கட்டுப்படுத்துதல், கூட்டத்தைக் கலைத்தல் போன்ற பணிகளில் காவல் துறையினரும், அதிவிரைவு படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் உடலில் பொருத்தப்படும் கேமராவை கட்டாயமாக்க வேண்டும். அந்த கேமராக்களை அவா்கள் தொடா்ந்து பயன்படுத்த வேண்டும். இதற்காக கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை உருவாக்க, நிபுணா் குழு அமைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி அருண் பரத்வாஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் மனுவை அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கையாகக் கருதி, அதுதொடா்பான தனது முடிவை 6 மாதங்களுக்குள் மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது. இதைத்தொடா்ந்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.