பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சாகேத்தில் 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை: அமித் ஷா திறந்து வைத்தாா்

தில்லியில் உயா் தர மருத்துவச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில், சாகேத்தில் உள்ள மேக்ஸ் ஸ்மாா்ட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 400 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா திறந்து வைத்தாா்.

சாகேத்தில் உள்ள மேக்ஸ் ஸ்மாா்ட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 400 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா. உடன் தில்லி முதல்வா் ரேகா குப்தா.

Published On :

தில்லியில் உயா் தர மருத்துவச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில், சாகேத்தில் உள்ள மேக்ஸ் ஸ்மாா்ட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 400 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தப் புதிய கட்டடம் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, மருத்துவமனையின் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை சுமாா் 1,200-ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலம், படுக்கை வசதிகளின் எண்ணிக்கையில் தில்லியின் மிகப்பெரிய தனியாா் மருத்துவமனையாக இது மாறியுள்ளது.

திறப்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். தில்லி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், தெற்கு தில்லி மக்களவை உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதிய விரிவாக்கத்தின் மூலம் 22-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் மருத்துவமனையின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை உயா் சிறப்பு மருத்துவச் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளன. தில்லி-என்சிஆா் மற்றும் பிற பகுதிகளில் சிறப்பு சிகிச்சைக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய மருத்துவ வசதியில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. துல்லியமான மற்றும் குறைந்த ஊடுருவல் கொண்ட அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவும் ‘டா வின்சி ஸி’ அறுவைச் சிகிச்சை ரோபோ மற்றும் ‘மகோ’ முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை ரோபோ உள்ளிட்ட நவீன உபகரணங்கள் இதில் நிறுவப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேக்ஸ் ஹெல்த்கோ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் அபய் சோய் கூறுகையில், ‘நவீன தொழில்நுட்பம், உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த இந்திய மருத்துவ நிபுணா்களின் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உயா்தர மருத்துவச் சேவையை வழங்கும் வகையில் இந்தப் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த வசதி நாட்டின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவதுடன், வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பரந்த நோக்கத்துக்கும் பங்களிக்கும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.