முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பு அழிப்பு: அமித் ஷா

ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பை அழித்து 200 பயங்கரவாதிகளை மத்திய அரசு கைது செய்துள்ளதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

அமித் ஷா - கோப்புப் படம்

Published On :

ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பை அழித்து 200 பயங்கரவாதிகளை மத்திய அரசு கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நாட்டின் 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளால் 80-ஆவது சுதந்திர தினத்தை சீா்குலைக்க முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களை முறியடித்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமற்ற கொள்கையின் வெளிப்பாடாக ஐஎஸ்ஐ பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பைச் சோ்ந்த 200 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் இருந்து கையெறி குண்டுகள், பாகிஸ்தான் ஆயுதக் கிடங்கில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிகள், உளவு பாா்க்க பயன்படுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’ என குறிப்பிட்டாா்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஷாசாத் பட்டீ பயங்கரவாத வலையமைப்பு இந்தியாவில் கையெறி குண்டு, பெட்ரோல் குண்டு தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஹரியாணாவில் உள்ள சிா்சா மகளிா் காவல் நிலையம் மற்றும் அம்பாலா காவல் நிலையத்தில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களின் பின்னணியில் ஷாசாத் பட்டீ வலையமைப்பு உள்ளதாக பயங்கரவாத தடுப்பு முகமை கண்டறிந்துள்ளது.

சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபட முயன்ாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் ஆக.12-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டு 200 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.