ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

நேபாளத்திற்கு 35 பேர் கொண்ட நிவாரணக் குழுவை அனுப்பிய சிக்கிம்!

நேபாள வெள்ளத்துக்கு நிவாரணக் குழு அனுப்பிய சிக்கிம் பற்றி..

 relief team

சிக்கிம் நிவாரணக் குழு - X

Updated On :

இமயமலை நாடான நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உதவிகளுடன் 35 பேர் கொண்ட குழுவை சிக்கிம் ஃபார் நேபாளம் என்ற நிவாரணப் பணியை முதல்வர் பிரேம் சிங் தமாங் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தமாங் கூறியதாவது,

நேபாளம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலும், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க சிக்கிம் முன்வந்துள்ளது.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்குழு, மருத்துவர்கள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மற்றும் மீட்பு உதவிகளையும் வழங்கும்.

மருத்துவப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய இக்குழு கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

'சிக்கிம் ஃபார் நேபாளம்' என்ற பெயரில் இந்தச் சிறப்புக் குழுவின் பயணத்தைத் தொடங்கி வைத்த தமாங், இப்பகுதி மக்களின் கருணை, மனிதாபிமானம் மற்றும் சகோதரத்துவ உணர்வின் வெளிப்பாடாக இந்த முன்னெடுப்பு அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

துயரமான இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றிணைந்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

மேலும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுடன் சிக்கிமின் பிரார்த்தனைகளும் சிந்தனைகளும் எப்போதும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.