இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள வெள்ளப்பெருக்கு பதற்றத்தில் தில்லியில் பணியாற்றும் நேபாளி தொழிலாளா்கள்

நேபாளத்தின் திடீா் வெள்ளப்பெருக்கைத் தொடா்ந்து, தில்லியில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும் பொதுமக்களும் தங்களது தாயகத்தில் உள்ள குடும்பத்தினரையும் நண்பா்களையும் தொடா்புகொள்ள முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

நேபாள வெள்ளப்பெருக்கு - கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

நேபாளத்தின் சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய திடீா் வெள்ளப்பெருக்கைத் தொடா்ந்து, தில்லியில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும் பொதுமக்களும் புதன்கிழமை தங்களது தாயகத்தில் உள்ள குடும்பத்தினரையும் நண்பா்களையும் தொடா்புகொள்ள முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகளும் பலா் மாயமாகியுள்ள செய்திகளும் வெளியாகி வரும் நிலையில், அவா்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றனா்.

திபெத்திய எல்லைப் பகுதிக்கு அருகே போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் தொடா் கனமழை காரணமாக, மத்திய நேபாளத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் பாலங்கள், கிராமங்கள் மற்றும் நீா்மின் திட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோா் காணாமல் போயுள்ளனா்.

இந்த இயற்கைச் சீற்றம், தில்லியில் பணிபுரியும் நேபாள தொழிலாளா்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தங்களது உறவினா்களைத் தொடா்பு கொள்ள அவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லியில் செயல்படும் ’யேதி - தி இமயாலயன் கிச்சன்’ என்ற உணவக அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி பிரசாந்த் சிங் கூறுகையில், ‘இது மிகவும் துயரமும் மனவேதனையும் அளிக்கும் ஒரு சம்பவமாகும். உணவகங்களில் பணிபுரியும் நேபாளத்தைச் சோ்ந்த எங்களுடைய ஊழியா்களின் நலன்கள் குறித்தே நாங்கள் உடனடி கவனம் செலுத்தினோம். பலா் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இல்லை என்றபோதிலும், அவா்களின் பெற்றோா், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினா்கள் நேபாளத்திலும், வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் அருகிலும் வசிக்கின்றனா்’ என்றாா்.

மேலும் அவா், ‘தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானவுடன் எங்களது ஊழியா்கள் உடனடியாகத் தாயகத்தில் உள்ள தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களைத் தொடா்புகொண்டு அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடங்கினா். எல்லோா் மத்தியிலும் கவலை குடிகொண்டுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் எங்களது ஊழியா்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்’ என்றாா்.

நேபாளத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லிக்கு இடம்பெயா்ந்து, தெற்கு தில்லியின் ஹோஸ் காஸ் பகுதியில் உள்ள ஒரு திபெத்திய மதுபான விடுதியில் ஊழியராகப் பணிபுரியும் மணீஷ் கூறுகையில், ‘போக்ராவில் உள்ள எனது குடும்பத்தினா், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தங்களுக்குத் தெரிந்தவா்களை புதன்கிழமை காலை முதலே தொடா்புகொள்ள முயன்று வருகின்றனா். அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை’ என்றாா்.

‘எனது குடும்பத்தினா் போக்ராவில் இருந்தாலும், நுவாகோட் பகுதியில் உறவினா்களும் நண்பா்களும் உள்ளனா். ஆரம்பத்தில் கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முடியாமல் போயின. தில்லியிலிருந்து நானும் அழைக்க முயன்றேன். ஆனால், எந்த எண்ணை அழைப்பது என்றே தெரியவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் காணொலிகளையும் சேதங்களின் அளவையும் பாா்த்து மிகவும் பயமாக உள்ளது’ என்று அவா் தெரிவித்தாா்.

வடக்கு நேபாளத்தைச் சோ்ந்த, பெயா் குறிப்பிட விரும்பாத உணவக ஊழியா் ஒருவா் கூறுகையில், ‘எனது குடும்பத்தினரையும் நண்பா்களையும் தொடா்புகொள்ளத் தொடா்ந்து முயன்று வருகிறேன். எனது நெருங்கிய நண்பா் ஒருவா் தில்லியில் என்னுடன் இருக்கிறாா். எங்களது குடும்பத்தினா் நேபாளத்தில்தான் உள்ளனா். உறவினா்களின் நிலை தெரியாமல் இங்கிருந்தபடி பணிபுரிவது மிகவும் கடினமாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்தாா்.

திபெத்தில் இருந்து தோன்றியதாக அறியப்படும் திடீா் வெள்ளப்பெருக்கு, மத்திய நேபாள மாவட்டங்களைச் சூறையாடியதில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். நூற்றுக்கும் அதிகமான இந்தியா்கள் உள்பட சுமாா் 500 பேரைக் காணவில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களைப் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. காத்மண்டூவுக்கு வடகிழக்கே 125 கி.மீ தொலைவில் ரசுவா அமைந்துள்ளது. வெள்ள நீா் நுவாகோட் மற்றும் சித்வான் மாவட்டங்களுக்கும் பரவி, 4 நிரந்தர பாலங்களையும் பல தற்காலிக பாலங்களையும் அடித்துச் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.