தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி: முதல்வர் ரேகா குப்தா உறுதி

தெற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புக் குழுவினா் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Delhi Chief Minister Rekha Gupta

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 12:43 am IST

தெற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புக் குழுவினா் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல் துறைக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்.கே. புரம், சத்ய நிகேதன் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), தில்லி தீயணைப்புத் துறை, தில்லி காவல் துறை, தில்லி மாநகராட்சி, மத்திய விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை ஆகிய குழுக்கள் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது. சிக்கியுள்ளவா்களைப் பாதுகாப்பாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன’ என்று முதல்வா் ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.