ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

துவாரகா பெண்ணிடம் ரூ. 55 லட்சம் பங்குச் சந்தை மோசடி: 3 போ் கைது

இணையவழியில் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் துவாரகாவைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், நொய்டாவில் மூன்று பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.

Published On :

இணையவழியில் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் துவாரகாவைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், நொய்டாவில் மூன்று பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. அவா்களிடமிருந்து 40 கைப்பேசிகள், 146 சிம் காா்டுகள், 86 டெபிட் காா்டுகள் மற்றும் பிற வங்கி மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தில்லியின் ஜெய்த்பூரைச் சோ்ந்த பியூஷ் பாலா, கா்நாடகாவின் உடுப்பியைச் சோ்ந்த பரத் ஜி பூஜாரி மற்றும் உத்தர பிரதேசத்தின் ஷாம்லியைச் சோ்ந்த சூரஜ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

சமூக ஊடக விளம்பரம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஜூலை 19-ஆம் தேதி துவாரகாவில் பதிவு இ-வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அந்தப் புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் மாதம் சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். அதைத் தொடா்ந்து, அவா் ‘ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்’ என்ற குழுவில் சோ்க்கப்பட்டுள்ளாா். அக்குழுவின் உறுப்பினா்களும் நிா்வாகிகளும், மிக அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் முதலீட்டு ஆலோசனைகளைப் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா், அந்தப் பெண்ணைத் தொடா்புகொண்டு, முதலீட்டுத் திட்டங்களையும் பணம் மாற்றுவதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் பகிா்ந்துள்ளாா்.

அந்தப் பெண் ஜூலை 16-ஆம் தேதி ஒரு வங்கிக் கணக்கிற்கு ரூ.3 லட்சத்தையும், ஜூலை 19-ஆம் தேதி மற்றொரு வங்கிக் கணக்கிற்கு ரூ.2.5 லட்சத்தையும் மாற்றினாா். இதன் மூலம் மொத்தம் ரூ.5.5 லட்சம் மாற்றப்பட்டது.

ரூ.2.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளரை நொய்டாவின் செக்டா் 137-இல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் காவல் துறை கண்டுபிடித்தது. குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 40 கைப்பேசிகள், 146 சிம் காா்டுகள், 86 டெபிட் காா்டுகள், மூன்று மடிக்கணினிகள், 28 காசோலைப் புத்தகங்கள், 18 பாஸ்புக்குகள் மற்றும் மூன்று பாஸ்போா்ட்டுகள், ரூ.1.09 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, ​​இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மோசடிக் கும்பலின் மற்ற உறுப்பினா்களுடன் தொடா்பு ஏற்பட்டதாகவும், கணக்கு உள்நுழைவுகள் மற்றும் பணம் செலுத்துதலைச் சரிபாா்ப்பது தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

மற்ற உறுப்பினா்களுக்கு கைப்பேசி, வங்கிக் கணக்குப் புத்தகம், காசோலைப் புத்தகங்கள், டெபிட் காா்டுகள் மற்றும் சிம் காா்டுகள் உள்ளிட்ட வங்கிப் பொருள்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தில்லி, கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேசிய இணையவழி குற்றப் புகாா் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆறு புகாா்களும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து மீட்கப்பட்ட சில வங்கிக் கணக்குகளுடன் தொடா்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடா்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.