ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பீடித்தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்!

ஆலங்குளம்,நவ.20:  திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 2009-10 கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:33 pm

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம்,நவ.20:  திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 2009-10 கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 2009-10 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான  விண்ணப்பங்களை, மாணவ மாணவியர் ஏற்கெனவே அனுப்பி விட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலாளர் நலத்துறையிடமிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அதில், இந்த கல்வியாண்டிற்கான பீடித்தொழிலாளர் கல்வி உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் அல்லது அவரது பெற்றோர்களில்  யாராவது ஒருவரது பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு அதன் கணக்கு எண்ணை இந்த மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனால் கடந்த சில தினங்களாக பெற்றோர் தங்களது அன்றாட வேலைகளை விட்டும், மாணவ, மாணவியர் விடுப்பு எடுத்தும் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க ஆலங்குளம், வீராணம், சிவலார்குளம், திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளுக்குச்  சென்று காத்து கிடக்கின்றனர்.

 ஒவ்வொரு வங்கி கிளையிலும் தினந்தோறும் குறிப்பிட்ட அளவிற்கே கணக்கு ஆரம்பிக்க முடியும் என்பதால்,காலையிலேயே வங்கியின் வாசலில் வரிசையாக காத்துக் கிடக்கின்றனர். பலர் கணக்கு ஆரம்பிக்க அறிமுகம் செய்பவர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். சில மாணவ, மாணவியர் சாப்பிடாமல் வந்து மயங்கி விழும் சூழலுக்கு ஆளாகின்றனர். படிப்பும் பாதிக்கப்படுகிறது.  ஆலங்குளம் பகுதியில் அதிகமான அளவில் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் வங்கியில் கணக்கு  தொடங்க வேண்டியுள்ளது.

  ஆலங்குளத்தில் கனரா வங்கியும், வீராணத்திலும், சிவலார்குளத்திலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு வங்கியில் 50 கணக்குகள்தான் புதிதாக ஆரம்பிக்க முடியும். அதற்கும் மேலான கணக்குகள் ஆரம்பிக்கத் தேவையான பணியாளர்கள் எந்த வங்கியிலும் இல்லை. இதனால் மாணவ, மாணவியருக்கு உடனடியாக கணக்கு ஆரம்பிப்பதில் வங்கிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், தேதியைக் குறிப்பிட்டு டோக்கன் வழங்கி அன்றைய தினம் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

   இந்நிலையில் அனைத்து பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 மாதம் ஆகிவிடும்.   எனவே, சம்பந்தபட்ட துறையினர் வங்கிக் கணக்கு எண்ணை பள்ளிகள் வழங்கும் காலத்தை 2010 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று வங்கி கணக்கு ஆரம்பிக்கும் முகாமை  நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.