ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் பீடித்தொழிலாளர் மருந்தகத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுமா?

ஆலங்குளம், ஜன. 28: ஆலங்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள, பீடித்தொழிலாளர் நலநிதி மருந்தகத்திற்கு, போதிய இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:00 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், ஜன. 28: ஆலங்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள, பீடித்தொழிலாளர் நலநிதி மருந்தகத்திற்கு, போதிய இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்றும் பீடித்தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆலங்குளம் பிரதான சாலையில் பீடித்தொழிலாளர் நலநிதி மருந்தகம் அமைந்துள்ளது. இந்த மருந்தகத்தில், வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யப்படும் பீடித்தொழிலாளர்கள் மட்டுமே சிகிச்சை பெறலாம் என்ற நிலை இருந்தது. அந் நிலை மாறி, தற்போது அனைத்து பீடித்தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

இதய அறுவை சிகிச்சைக்கான உதவித்தொகை, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான உதவித்தொகை, பீடித்தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட சேவைகளை இந்த மருந்தகம் வழங்கி வருகிறது.

சுற்றியுள்ள 50-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து, சுமார் 20 ஆயிரம் பீடித்தொழிலாளர்களின் குடும்பத்தினர் இந்த மருந்தகத்திற்கு சிகிச்சைக்காகவும், பல்வேறு சேவைகளுக்காகவும் வருகின்றனர்.

காலை 9.30 முதல் 1 மணி வரை மட்டுமே மருந்தகத்தில், வேலை நேரம் என்பதால், தொலைவில் உள்ள மக்கள் அதிகாலையிலேயே பஸ் நிலையங்களில் காத்திருந்து, பஸ் பிடித்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினந்தோறும் சுமார் 200 முதல் 250 பேர் வரை சிகிச்சை பெற வருகின்றனர்.

இது போக, நாலாங்கட்டளை, குறிப்பன்குளம், பூலாங்குளம், சாலைப்புதூர், கழுநீர்குளம் ஆகிய பகுதிகளுக்கு வாரந்தோறும், நண்பகலுக்கு மேல் மொபைல் மருத்துவமுகாம் செய்யப்படுகிறது. இதில், தினந்தோறும் சுமார் 100 முதல் 200 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். முக்கிய நகரங்களில் அவ்வப்போது சிறப்பு மொபைல் முழுநாள் மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது.

ஆலங்குளம் மருந்தகத்தில் டாக்டர், மருந்தாளுநர், செவிலியர், உதவியாளர், டிரைவர், வாட்ச்மேன் என ஆறுபேர் பணியாற்றுகின்றனர். ஆனால், மருந்தகத்திற்கு இதுவரை நிரந்தர டாக்டர் நியமிக்கப்படவில்லை. வாரத்திற்கு மூன்று டாக்டர்கள் புதுப்பட்டி, சுரண்டை, தென்காசி என வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் வந்து சிகிச்சை அளிப்பதால், வெவ்வேறு டாக்டர்கள் கொடுக்கும் சிகிச்சை வேறுபாடுகளால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைகின்றனர்.

மேலும், இந்த மருந்தகத்தில் உள்ள பணியாளர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்கள் குறித்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், பீடித்தொழிலாளர்கள் அடையாளஅட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும்போது, பணியாளர்கள் இல்லாமல், பல நாள்கள் அலையும் நிலை உள்ளது.

எனவே, இந்த மருந்தகத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிப்பதுடன், சுமார் 8 கி.மீ தொலைவிற்குள் டாக்டர் தங்கி இருந்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு உட்பட்டு, மருந்தகத்திற்கு அருகிலே டாக்டர் தங்கியிருந்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும். மருந்தகம் சிறப்பாக செயல்பட, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பீடித் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து திமுக மாவட்ட பிரதிநிதி எம்.ஜோசப்தங்கம், காங்கிரஸ் வட்டார செயலர் எம்.ராஜ்குமார் ஆகியோர் கூறும்போது, ஆலங்குளம் பீடித்தொழிலாளர் மருத்துவமனையில், போதிய இடவசதி இல்லை. சிகிச்சைக்கு வரும் பீடித்தொழிலாளர்கள் உட்கார பெஞ்ச் வசதி கிடையாது. குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் வெயிலில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் இப் பகுதியில் அதிக அளவில் உள்ளனர். ஆனால், வியாதிகளுக்கான மாத்திரைகள் மட்டுமன்றி வைட்டமின் மாத்திரைகளும் போதிய அளவில் இல்லை. தட்டுப்பாடாகவே உள்ளது. மாத்திரைகள் வந்தாலும், ஸ்டாக் வைக்க கூடிய அளவில் போதிய இடவசதி கிடையாது. ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை ஆகியன இல்லாமலும், குறுகிய இடமாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களைக் கண்டறியும் கருவிகளும், ஆய்வக வசதியும் இல்லை. இதை எல்லாம் ஏற்படுத்தும் வகையில் புதிய கட்டடம் அமைத்தும், அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவமனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஆலங்குளம் பீடித்தொழிலாளர் நல மருந்தகத்திற்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு, பேரூராட்சி நிர்வாகம் அல்லது வருவாய்த்துறையினர் இடம் ஒதுக்கி, எம்.பி அல்லது எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்று, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், புதிய கட்டட கட்டுமானப் பணியை தொடக்க வேண்

டும் எனவும், நிரந்தர மருத்துவஅலுவலர் பணியில் இருக்கும் வகையிலும், மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.