6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்

தூத்துக்குடி, ஜன. 8:   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்துள்ளது.   இதுதொடர்பாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
Updated on
1 min read

தூத்துக்குடி, ஜன. 8:   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்துள்ளது.

  இதுதொடர்பாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

  2011-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவிலான 15 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து, மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் தயாரிப்புக் குழுவும், ஒவ்வொரு சட்டப்பேரவைத்  தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகின்றனர்.  

தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கனகராஜ், மாநில பொதுச் செயலர் சரவணபெருமாள், கோட்ட இணை அமைப்புச் செயலர் ராஜா, மாநில பயிற்சி முகாம் பிரிவுத் தலைவர் ராஜகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் கணபதி சந்தானம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம்,

மாநில பொதுக்குழு உறுப்பினர் லங்கபதி, மாவட்டப் பிரசாரப் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டச் செயலர் ராமானுஜம், மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் செந்தில், மாவட்ட முன்னாள் பொதுச் செயலர் பாலாஜி ஆகியோர் மாவட்ட தேர்தல் தயாரிப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மாவட்டத் தலைவர் கனகராஜ் தூத்துக்குடி தொகுதிக்கும், மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் செந்தில் திருச்செந்தூர் தொகுதிக்கும், மாவட்ட

முன்னாள் செயலர் மகேஸ்வரன் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கும், மாவட்ட முன்னாள் பொதுச் செயலர் பாலாஜி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும், மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் கோவில்பட்டி தொகுதிக்கும் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com