தென்தாமரைக்குளம் பேரூராட்சியில் கட்டடங்கள் திறப்பு

நாகர்கோவில், ஜன.16: தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 11 லட்சத்தில்  கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தென்தாமரைக்குளம் பேரூராட்சித் தலைவி அன்புவாணி ஜ

நாகர்கோவில், ஜன.16: தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 11 லட்சத்தில்  கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தென்தாமரைக்குளம் பேரூராட்சித் தலைவி அன்புவாணி ஜெகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கே.என். மார்த்தாண்டன், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் என். தாமரைபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ. 4.50 லட்சத்தில் விஜயநகரியில் மேல்நிலைக் குடிநீர்த்தேக்கத் தொட்டி, இலந்சையடிவிளை, புன்னையடியில் தலா ரூ. 2 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடங்கள், கிண்ணிகண்ணன்விளையில் ரூ. 2 லட்சத்தில் கலையரங்கம், தேரிவிளையில் ரூ. 75 ஆயிரத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் திறந்துவைத்துப் பேசினார்.

பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் வரவேற்றார். கிண்ணிகண்ணன்விளை ஊர் கமிட்டி தலைவர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com