குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இரு மாணவிகள் தற்கொலை: மாவட்ட ஆட்சியர் வேதனை

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆட்சியர் சி. ச

Updated On :12 மே 2013, 5:54 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆட்சியர் சி. சமயமூர்த்தி வேதனை வெளியிட்டுள்ளார்.

 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தென்காசி மற்றும் புளியங்குடியைச் சேர்ந்த இரு மாணவிகள்

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெரியவருகிறது. இது மாவட்ட நிர்வாகத்துக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. படிக்காதவர்கள் மேதைகளாகி நாட்டுக்கு சாதித்துள்ளதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதிப்பதற்கு இன்னும் பல வழிகள் உள்ளதைக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவனத்தில் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

  குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டோம் என்று வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கும் நல்ல சந்தர்ப்பங்கள் காத்திருக்கிறது. மாணவர்கள் இந்நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில் கொண்டு தடைகளைப் படிக்கட்டுகளாக நினைத்து கடுமையாக உழைத்து பெற்றோருக்கும், மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் நல்ல புத்திமதிகளைக் கூறி, நல்வழிப்படுத்தி,அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகவுள்ளது.  இதை மனதில் கொண்டு குறைந்தளவு மதிப்பெண்கள் பெறுவோரின் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.