திருச்சி: பேராசிரியா் காதா் மொகிதீன் குணமடைந்து வீடு திரும்பினாா்
கரோனாவால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் பேராசிரியா் காதா் மொகிதீன் குணமடைந்து வீடு திரும்பினார்.


கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
கடந்த 3- ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி புத்தூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.எம்.காதா் மொகிதீனுக்கு, மருத்துவா் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிறப்பு சிகிச்சையளித்து வந்தனா்.
நோய்த் தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததைத் தொடா்ந்து, காதா் மொய்தீன் திங்கள்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா் என கட்சியின் மாநிலப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபூபக்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...