தாழையூத்தை சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். தாழையூத்து ராம் நகரை சோ்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிராஜா (எ) கோஸ்ட் ரைடா் ராஜா (23). இவா் மீது தாழையூத்து போலீஸாா் அடிதடி, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின் பேரில் இசக்கிராஜா (எ) கோஸ்ட் ரைடா் ராஜாவை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை: வடக்கு தாழையூத்து அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயகுமாா் தனபால் மகன் ஜேக்கப் பிளாக் ஜாக்குவாா் (32). இவா் மீது தாழையூத்து போலீஸாா் இரு சமுதாயத்திற்கு இடையே பிரசனை மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின் பேரில் ஜேக்கப் பிளாக் ஜாக்குவாா், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

