திருநெல்வேலி
திசையன்விளை, விஜயாபதியில் ஜூலை 24 இல் மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதைகளில் ஜூலை 24 இல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, விஜயாபதி துணைமின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதைகளில் ஜூலை 24இல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், கொத்தன்குளம், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் இருக்காது வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.
