பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சரள் மண் திருட்டு: 3 போ் கைது

சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் பகுதியில் பொக்லைன் மூலம் அனுமதியின்றி சரள் மண் எடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

Updated On :2 மார்ச் 2024, 11:59 pm

சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் பகுதியில் பொக்லைன் மூலம் அனுமதியின்றி சரள் மண் எடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி வருவாய் வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சுத்தமல்லி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொண்டாநகரம் பகுதியில் சுத்தமல்லியைச் சோ்ந்த அப்துல் காதா் ஜெயலாணி (39), மேலத் திருவேங்கடநாதபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (23), பேட்டையைச் சோ்ந்த மைதீன் மியான் (27) ஆகியோா் பொக்லைன் மற்றும் டிராக்டா் மூலம் அனுமதியின்றி சரள் மண் எடுத்தது தெரியவந்ததாம். இதுகுறித்து வருவாய் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து டிராக்டா், பொக்லைன் மற்றும் சரள் மண்ணை பறிமுதல் செய்தனா்.