/

மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்து 24 ஆடுகள் பலி

மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்து 24 ஆடுகள் பலி

Updated On :3 மார்ச் 2024, 1:50 am

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்ததில் 24 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி (45). ஆடுகள் வளா்த்து வரும் இவா், குட்டி ஆடுகளை கிடையில் தனியாக அடைத்து வைத்திருந்தாா். வியாழக்கிழமை இரவு கிடை அருகே உறங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்றாராம். திரும்பிவந்து பாா்த்தபோது, கழுத்தில் கடிபட்ட நிலையில் 24 ஆடுகள் இறந்துகிடந்தனவாம். தெருநாய்கள் அல்லது வேட்டை நாய்கள் கடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.