வி.கே.புரத்தில் தீக்குளிக்க முயன்றவா் மீது வழக்குப் பதிவு

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றவா் மீது விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். விக்கிரமசிங்கபுரம் உச்சிமேட்டுத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் என்பவா் தனது வீட்டினருகில் புதிதாக வீடுகட்டுபவா் தனக்கும் பாத்தியப்பட்ட நடைபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக நகராட்சியில் புகாா் கொடுத்தாராம். இந்நிலையில் தனது புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். இதுகுறித்து நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com