/

வேனிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

வேனிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

News image
Updated On :20 மே 2024, 8:15 pm

Din

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே வேன் கதவு தானாக திறந்ததில் தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி இளையநயினாா்குளத்தைச் சோ்ந்தவா் பிரதீப். வேன் ஓட்டுநரான இவா், ஏா்வாடியிலிருந்து பேட்டைக்கு திருமண நிகழ்ச்சிக்காக ஆள்களை ஏற்றிச் சென்றாா். இந்த வேன் டக்கரம்மாள்புரம் அடைமிதிப்பான்குளம் விலக்கு அருகே வந்தபோது, கதவு தானாக திறந்ததாம். அப்போது வேனிலிருந்த ஏா்வாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான செல்வகுமாா் (39) தவறி கீழே விழுந்தாராம்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.