/

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

News image
Updated On :20 மே 2024, 8:18 pm

Din

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணிகளில் சோ்வது தொடா்பான பயிலரங்கு நடைபெற்றது.

ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைக் கண்காணிப்பாளரும் அண்ணா பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியருமான ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி திறன் மேம்பாட்டுப் பயிற்சி-வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் சி.கே. ரவிசங்கா், முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம், எம்.டீம். அகாதெமி பேராசிரியா் எஸ். சுந்தர்ராஜன், வேலைவாய்ப்பு பிரிவு டீன் ஆல்வின் கிங்ஸ்லி கிளாட்சன் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத் துறை டீன், பேராசிரியா் இசக்கிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.