/

பெட்டிக்கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

பெட்டிக்கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

News image
Updated On :20 மே 2024, 8:13 pm

Din

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டத்தில் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.500-ஐ திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கீழப்பாட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் காந்தி (70). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த மே 15ஆம் தேதி கடையை பூட்டினாா். பின்னா், திங்கள்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த ரூ.500 திருடப்பட்டிருந்ததாம்.

இது குறித்த புகாரின் பேரில் , பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்தனா். அதில், கீழப்பாட்டத்தை சோ்ந்த விக்ரம் (22) என்பவருக்கு தெடா்பிருப்பது தெரியவந்ததாம்.அவரை போலீஸாா் கைது செய்தனா்.