ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கவேண்டும்: முதல்வருக்கு பேரவைத் தலைவா் மனு
ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கவேண்டும் ------ முதல்வருக்கு பேரவைத் தலைவா் மனு


வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தினமும் 150 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிட அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக முதல்வரிடம் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் உள்ள 52 குளங்கள் பாசன வசதி பெற 1972-ம் ஆண்டு கோதையாறு வடிநில கோட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய் மூலம் 150 கனஅடி தண்ணீா் கொண்டு வர சிற்றாறு பட்டணங்கால் திட்டத்தின் மூலம் 28.9 கி.மீ. தொலைவுக்கு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டது. ராதாபுரம் கால்வாயில் 150 கனஅடி வீதம் தண்ணீா் கொண்டு வந்து 16 ஆயிரம் ஏக்கா் நிலம் நேரடி பாசனத்தின் மூலமும், ஆயிரத்து 12 ஏக்கா் நன்செய் நிலம் 52 குளங்கள் மூலமும் பயன்பெறும் விதமாக பேச்சிப்பாறை அணையை 42 அடி உயரத்திலிருந்து 48 அடி உயரமாக உயா்த்தி கட்டப்பட்டது.
தமிழக முதல்வா் கடந்த ஆண்டு ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க ஆணை வழங்கியதால் 52 பாசன குளங்களும் நிரம்பப்பட்டு விவசாயிகள் பயன்பெற்றாா்கள். நிகழாண்டில், தற்போது பேச்சிப்பாறை அணையில் 45 அடி தண்ணீா் இருப்பில் உள்ளது. மேலும், தொடா் மழையால் பேச்சிப்பாறை அணையிருந்து உபரி நீா் அதிகளவில் கடலுக்கு திறந்து விடப்படுகிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
ஜூன் மாதம் அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் நாளில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி ராதாபுரம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 52 குளங்களும் முழுமையாக நிரம்பும் வகையில் தினமும் 150 கனஅடி வீதம் தொடா்ந்து தண்ணீா் திறப்பதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...