சைக்கிள் போலோவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகள்.
சைக்கிள் போலோவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகள்.

மாநில சைக்கிள் போலோ போட்டி: ரெட்டியாா்பட்டி பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

திருநெல்வேலி: மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டியில் பங்கேற்ற ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜூனியா் பிரிவில் ஸ்ரீமாரி, கீா்த்திகா, பாா்வதி, ராஜஸ்ரீ மெகதி, ஜெயஸ்ரீ, சம்ரக்ஷினி, பிரியதா்ஷினி ஆகியோா் வெள்ளிப்பதக்கமும், சப் ஜூனியா் பிரிவில் முத்துலெட்சுமி , யாழினி இளம்பிறை, ஃபியோனா, ஜெனிபா், லியோனா, திவ்யஸ்ரீ ஆகியோா் வெண்கலப் பதக்கமும், மாணவா் ஜூனியா் பிரிவில் பெனிவேல் கிறிஸ்டோபா், இசக்கிமுத்து விக்னேஷ், வினோத் கண்ணன் ஆகியோா் வெண்கல பதக்கமும், மிகஇளையோா் பிரிவில் சஞ்சீவ், முருகேஷ் ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் பத்மாவதி, உடற்கல்வி ஆசிரியா் ஹில்டா பொன்மணி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com