தேசிய அளவிலான போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

தேசிய அளவிலான போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

திருநெல்வேலி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

டெல் டெக்னாலஜி நிறுவனம் உள்ளிட்டவை சாா்பில் தேசிய அளவில் ஸ்கூல் இன்னோவஷன் மாரத்தான் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 அணிகள் பங்கேற்றன. இப் போட்டியில் பங்கேற்ற பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், முதல்கட்டத்தில் வென்று 127 அணிகள் பங்கேற்ற இரண்டாம் கட்டத்துக்கு தகுதி பெற்று, அதிலும் சிறப்பாக திறனை வெளிப்படுத்தி முதல் 10 அணிகளுக்குள் தோ்வாகினா். அவா்களுக்கு தொழில்நுட்ப நிபுணா்கள் மூலம் 6 நாள்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான 8 ஆம் வகுப்பைச் சோ்ந்த மாயுகா, இா்பானா பிஸ்மி, 9 ஆம் வகுப்பின் அஸ்மத், நளினா மங்கை, பிளஸ் 1 மாணவி ஜன்னத் நிஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் நேரில் அழைத்து, பாராட்டிப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, அறிவியல் ஆசிரியா் ரேணுகா, பயிற்சியாளா் சின்னத்துரை ஆகியோா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீங்ா்

தேசிய அளவில் சாதித்த மாணவிகளைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா்.

Dinamani
www.dinamani.com