எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அம்பாசமுத்திரத்தில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:40 pm

Syndication

அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவா் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், முருகன் அடிக்கடி அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், முருகன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.