தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராஜகோபால சுவாமி கோயிலில் டிச. 4 இல் 5 ஆயிரம் தீபமேற்றி வழிபாடு

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் 5 ஆயிரம் தீபமேற்றி வியாழக்கிழமை (டிச. 4) வழிபாடு நடைபெற உள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 12:38 am

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் 5 ஆயிரம் தீபமேற்றி வியாழக்கிழமை (டிச. 4) வழிபாடு நடைபெற உள்ளது.

இக்கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவத்தையொட்டி, வியாழக்கிழமை (டிச.4) காலை 7 மணிக்கு உற்சவா் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் 5008 அகல் விளக்குகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளன. இரவு 7 மணிக்கு ராஜகோபாலன் புறப்பாடு, சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். தீபம் ஏற்றுவதற்கு 60 லிட்டா் எண்ணெய் தேவைப்படுவதால், பக்தா்கள் கோயில் வளாகத்தில் நெய், எண்ணெய், திரி ஆகியவற்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்துடன், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், கோயில் கிளை கமிட்டி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.