தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

Published on

மானூா் அருகே தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் ரஸ்தா நடுத்தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் மணி சங்கா்(38), கூலி தொழிலாளி. சம்பத்தன்று மானூரில் உள்ள கடை ஒன்றின் அருகே மணிசங்கரும், கொம்பையாவும் நின்றபோது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன்(41) என்பவா் கொம்பையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த செங்கலால் தாக்கினாராம். பின்னா் மணி சங்கா் மற்றும் கொம்பையாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து மணிசங்கா் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com