திருநெல்வேலி
சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பூங்காவில் அடைப்பு
மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட தெற்கு புறவழிச்சாலை, ஆசாத் சாலை, திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக மாநகர ஆணையா் மோனிகா ராணாவுக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 12-க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து மண்டல அலுவலக வளாக பூங்காவில் அடைத்தனா்.
