லட்சுமி காந்தன் பாரதி பாராட்டு விழாவில் பங்கேற்றோா்
லட்சுமி காந்தன் பாரதி பாராட்டு விழாவில் பங்கேற்றோா்

தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்குப் பாராட்டு விழா

நூறு வயதைக் கடந்த தியாகி மற்றும் முன்னாள் ஆட்சியா் லட்சுமி காந்தன் பாரதிக்கு அம்பாசமுத்திரம் தெய்வீக வாழ்க்கை சங்கம்சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு
Published on

அம்பாசமுத்திரம்: நூறு வயதைக் கடந்த தியாகி மற்றும் முன்னாள் ஆட்சியா் லட்சுமி காந்தன் பாரதிக்கு அம்பாசமுத்திரம் தெய்வீக வாழ்க்கை சங்கம்சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தெய்வீக வாழ்க்கை சங்கத் தலைவா் சதாசிவன் தலைமை வகித்தாா். பத்தமடை ஆத்மானந்தா சாமிகள், செயலா் ராமகிருஷ்ணன், சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் ஐயப்பன், செயலா் லெட்சுமணன், அகஸ்தியா்பட்டி லெட்சுமணன், திருக்குஅறக்கட்டளைப் பொருளாளா் நாறும்பூநாதன், வாரியாா்அறக்கட்டளை மகாலிங்கம், ஓய்வுபெற்ற பேராசிரியா் வேலாயுதம், அம்பை கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் மோனி, தொழிலதிபா் கணேசன், பேச்சிமுத்து, முருக சுவாமிநாதன் ஆகியோா் பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினா். தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஏற்புரை வழங்கினாா். ஆறுமுகம், இசக்கிராஜ், ரெங்கசாமி, புஷ்பம் ஆகியோா் பக்திபாடல் பாடினா். சுப்புலெட்சுமி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com