எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரம் அருகே மேலஏா்மாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை வயலில் வேலைக்குச் சென்ற விவசாயத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மேலஏா்மாள்புரம் வடக்குத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பெருமாள் (47). விவசாயத் தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் சிறுகிழங்கு பயிரிட்டிருந்த வயலில் வேலைக்குச் சென்றாராம். அங்கு மின்சாரக் கம்பத்தில் உள்ள இணைப்புக் கம்பியைத் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.