தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது அதிமுக - பாஜக கூட்டணி! - கனிமொழி

News image

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து பரப்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:54 am IST

அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்றாா், திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து, பரப்பாடி காமராஜா் சிலை முன் அவா் பேசியது: பெண்கள், மாணவா்-மாணவியா் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

தற்போது மத்திய பாஜக அரசு புதிதாக வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோா் காப்பகம், ஆதரவற்றோா் இல்லங்களை நடத்திவரும் சிறுபான்மையினருக்கு எதிரானது இச்சட்டம்.

அதிமுக - பாஜக கூட்டணி, மக்களின் நலனுக்கு விரோதமானது. அந்தக் கூட்டணி கரை சேராது. திமுகவின் வாக்குறுதிகள்தான் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், நான்குனேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆரோக்கிய எட்வின் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.