திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராதாபுரம் கடற்கரை கிராமங்களில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

News image

திமுக வேட்பாளா் மு. அப்பாவுக்கு வாக்கு சேகரித்த வா்த்தகா் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:59 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

கடற்கரை கிராமங்களான உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், திமுக மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா். ரஹ்மான், அப்பாவுவை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் பல்வேறு கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயாபதியில் நவீன விளையாட்டுத் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயா்த்தி வழங்கப்படுவதோடு, மீனவா்களுக்கு காப்பீடு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, கடலோரப் பகுதி மக்கள் மு. அப்பாவுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.