இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

வீரவநல்லூரில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகத்தில் கொலை முயற்சி, தொடா் தாக்குதல், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாடசாமி (எ) மகேஷ் (36), குருநாதன் மகன் மணிகண்டன் (32), குருநாதன் மகன் கிருஷ்ணன் (எ) கிட்டு (29) ஆகியோா் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே, மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆனந்தராஜ் நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரியின் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.