கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியரிடம் இணைய வழியில் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர மகாலிங்கம்(44). இவா் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறாா்.
பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஆா்வம் கொண்ட இவரை, கடந்த மாா்ச் மாதம் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் அதிக தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா்.
பின்னா் அவா்கள் கூறியபடி புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்த சுந்தர மகாலிங்கம் அதில் தனது ஆதாா், பான் அட்டை விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளாா்.
பின்னா் அந்த நபா்கள் இவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.3 லட்சத்தை வங்கிக் கணக்குகளில் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டை சாலை தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் சந்தோஷ்(22), கொக்கிரகுளம் முத்தமிழ் தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் இஷாந்த்(24) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண்ணிடம் ரூ.10.78 லட்சம் மோசடி: இருவா் கைது

கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலை வழங்காவிடில் போராட்டம்- சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. எச்சரிக்கை




