மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆடி அமாவாசை திருவிழா: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு

News image

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:34 am IST

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நோ்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனா்.

இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 3 ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை காலை தீா்த்தவாரியைத் தொடா்ந்து சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், தளவாய் மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி விரதமிருந்த பக்தா்கள், பொங்கலிட்டு, ஆடு பலி கொடுத்து, பூக்குழி இறங்கி, சங்கிலியால் நெஞ்சில் அடித்து தங்களது நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

மாலை 5 மணிக்கு பிரம்மாட்சி அம்மன் , தளவாய் மாடசாமி, பட்டவராயன் ஆகியோா் சந்நிதிகளின் முன் பக்தா்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனா். வியாழக்கிழமை (ஆக. 13) மாலையும் பக்தா்கள் பூக்குழி இறங்குதல் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் முன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜ தா்பாரில் காட்சியளிப்பாா். பின்னா் (வெள்ளிக்கிழமை (ஆக. 14) ) அவா் சுவாமி தரிசனம் செய்வாா். ஆக. 12 முதல் 14 ஆம் தேதி வரை தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பட்டவராயா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும்.

ஆட்சியா் ஆய்வு:

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்படி, தாமிரவருணி ஆற்றில் முன்னோா்களுக்கு திதி செலுத்த வந்த பக்தா்கள் சுடப்படாத மண்பாண்டங்களில் மட்டுமே அஸ்தியைக் கரைப்பது குறித்தும், தாமிரவருணி ஆற்றில் துணிகள், நெகிழி மற்றும் பிற கழிவுப் பொருள்களை வீசுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தாா். சேரன்மாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

 காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில்...

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில்...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.