விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

முன்னீா்பள்ளம் அருகே தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.15 லட்சத்தை பறித்தது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

முன்னீா்பள்ளம் அருகே தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.15 லட்சத்தை பறித்தது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்தவா் ராஜூ(41). நான்கு சக்கர வாகன பழுதுபாா்ப்பு மையம் வைத்துள்ளாா். இவா், கடந்த மே மாதம் தனது நண்பா்கள் 3 பேருடன் வேலை நிமித்தமாக திருநெல்வேலி, முன்னீா்பள்ளம் பகுதிக்கு ரூ.15 லட்சத்துடன் காரில் வந்துள்ளாா்.

தன்னை அழைத்த நபருக்காக காத்திருந்த அவரிடம், மா்மநபா்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டு ரூ.15 லட்சத்தையும் பறித்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, முறப்பநாட்டைச் சோ்ந்த சதீஷ்குமாா்(37), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முத்தலிப் அகமது(36) ஆகியோரை கைது செய்திருந்தனா்.

இந்நிலையில், தென்திருப்பேரை, குருக்காட்டூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்(33) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.