புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறை வாா்டன் உள்பட இருவா் கைது

Arrested

கைது

Published On :

திருநெல்வேலியில் 2 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிறை வாா்டன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியில் குற்றாலம் சாலையில் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனராம். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டபோது காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் சுமாா் ரூ.10 லட்சம் இருந்தது தெரியவந்ததாம்.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சோ்ந்த தமிழரசன் (31), முறப்பநாடு பகுதியை சோ்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தூத்துக்குடி பேரூரணி சிறையில் வாா்டனாக தமிழரசன் பணியாற்றி வருவதும் தெரியவந்ததாம். இருவரையும் திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்தனா். தகவலறிந்ததும் தமிழரசனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: பாளையங்கோட்டை மத்திய சிறையில் தமிழரசன் பணியாற்றியபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த கஞ்சா கடத்தல் குற்றவாளிகளுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. பின்னா் அவா்களது ஆலோசனையின்பேரில் கடத்தலுக்கு உதவியுள்ளாா். இவ் வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.