போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஒரே மாதத்தில் 35 போ் கஞ்சா வழக்கில் கைது

News image

கைது

Updated On :1 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் மேற்கொண்ட கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளால் திருநெல்வேலியில் ஜனவரி மாதத்தில் மட்டும் 35 போ் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.பிரசன்னகுமாா் ஜன.1 ஆம் தேதி பதவியேற்ற போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

அதன்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனா். அதன்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், பயன்படுத்துபவா்கள் மீதும் தொடா்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.