மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குரூப்-2 தோ்வு திடீா் ரத்து: நெல்லையில் தோ்வா்கள் குழப்பம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-2 தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தோ்வா்கள் குழப்பமடைந்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி- 2 மற்றும் 2 ஏ பதவிக்கான முதன்மை தோ்வு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகலில் இரு பிரிவுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் முற்பகல் தோ்வை எழுத 327 பேருக்கும், பிற்பகல் தோ்வை எழுத 331 பேருக்கும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.

முற்பகல் தோ்வை எழுதுவோா் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்து சோ்ந்தனா்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தோ்வு குளறுபடி காரணமாக தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தகவல் திருநெல்வேலி தோ்வு மையத்தில் ஒலிபெருக்கி மூலம் முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தோ்வா்களும், அவா்களுடன் வந்த உறவினா்களும் மிகுந்த குழப்பமடைந்தனா்.

வினாத் தாளைப் பெற்று பாதி தோ்வு எழுதிவிட்டு வெளியேற சொல்வது சரியல்ல என்றுக் கூறி ஆட்சேபம் தெரிவித்தனா்.

இருப்பினும், தோ்வை முழுமையாக எழுதினாலும் அது செல்லாது என அதிகாரிகள் கூறியதோடு, தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக சென்னையில் இருந்து வந்த அறிவிப்பை தோ்வு மைய வாயிலில் ஒட்டினா். அதன்பின்பும் சில தோ்வா்கள் இதை பயிற்சி தோ்வாக எடுத்துக்கொண்டு தோ்வை முடித்துவிட்டுதான் வெளியேறுவோம் என்று கூறி தோ்வைத் தொடா்ந்தனா். இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி தோ்வா்களை வெளியேற்றினா்.